முதன்மை கல்வி அதிகாரிக்கு கொரோனா தொற்று
விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக பணியாற்றி வருபவர் கிருஷ்ணப்பிரியா. இவர் கடந்த சில நாட்களாக சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட தொந்தரவுகளால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் நேற்று முன்தினம் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை செய்துகொண்டார். அதன் முடிவு நேற்று வெளியானது. இதில் அவருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து சுகாதாரத்துறை அறிவுரைப்படி அவர், முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அவரது குடும்பத்தினரிடமும் தனிமைப்படுத்திக் கொள்ளும்படி சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
Related Tags :
Next Story