மருமகளை மரத்தை வெட்டுவது போல் 20 முறை வெட்டியதாக மாமனார் பரபரப்பு வாக்கு மூலம்


மருமகளை மரத்தை வெட்டுவது போல் 20 முறை வெட்டியதாக  மாமனார் பரபரப்பு வாக்கு மூலம்
x
தினத்தந்தி 2 Dec 2021 6:37 PM IST (Updated: 2 Dec 2021 6:37 PM IST)
t-max-icont-min-icon

நாட்டறம்பள்ளி அருகே மருமகளை கொன்ற மாமனார், மரத்தை வெட்டுவது போன்று 20 முறை வெட்டியதாக கூறி உள்ளார்.

ஜோலார்பேட்டை

நாட்டறம்பள்ளி அருகே மருமகளை கொன்ற மாமனார், மரத்தை வெட்டுவது போன்று 20 முறை வெட்டியதாக கூறி உள்ளார்.

ஆசிரியை கொலை

நாட்டம்பள்ளியை அடுத்த ஜங்களாபுரம் டேக்கன் வட்டம் பகுதியை சேர்ந்தவர் மணி. இவரது மகன் சிவன் ராணுவ வீரராக பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி முருகம்மாள் (வயது 32). குரும்பேரி ஊராட்சி ஓன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு மதுநிஷா என்ற மகளும், ரோகித் என்ற மகனும் உள்ளனர்.

குடும்ப பிரச்சினை காரணமாக முருகம்மாள் தனது கணவரை பிரிந்து திருப்பத்தூர் அருகே கெஜல்நாயக்கன்பட்டி பகுதியில் வாடகை வீட்டில் தனது இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார். மேலும் இருவருக்கும் விவகாரத்து வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்தநிலையில் தனது கணவருக்கு இரண்டாவது திருமணம் நடைபெற்றதாக கிடைத்த தகவலின்பேரில் அதனை கேட்பதற்காக முருகம்மாள் கடந்த 29-ந் தேதி தனது கணவர் வீட்டுக்குச் சென்றார். அப்போது ஏற்பட்ட தகராறில் முருகம்மாளை, மாமனார் மணி வெட்டி கலை செய்தார். அவரை நாட்டறம்பள்ளி போலீசார் கைது செய்தனர்.

இந்த கொலை குறித்து மணி கூறியதாக போலீசார் தெரிவித்ததாவது:-

20 முறை வெட்டினேன்

விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் ஏன் என் வீட்டிற்கு வந்தாய் எனக் கேட்டதற்கு முரும்மாள் இது எனது கணவர் வீடு, நீ வேண்டுமானால் வீட்டை விட்டு வெளியே போ என கூறி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்து பால் காய்ச்சிக் கொண்டிருந்த முருகம்மாளின் பின் கழுத்தில் வெட்டு கத்தியால் வெட்டினார். இதில் முருகம்மாள் சாகவில்லை. இதனால் முருகம்மாள் சாகும் வரை தொடர்ந்து சுமார் 20 முறை மரம் வெட்டுவது போல் வெட்டினேன்.

அப்போது முருகம்மாளின் மகள் மதுநிஷா என்னுடைய அம்மாவை ஏதும் பண்ணாத தாதா என கூறினாள். இதனால் நான் உன்னை இந்த கத்தியால் வெட்டி கொலை செய்துவிடுவேன் என மிரட்டிவிட்டு அதன் பிறகு கத்தியை அங்கேயே போட்டு விட்டு வயல் வழியாக நடந்து சென்று சாலையோரம் உள்ள ஒரு ஓட்டலில் காலை டிபன் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது போலிசார் கைது செய்ததாக கூறி உள்ளார்.

Next Story