மாடு மீது பஸ் மோதியதில் தகராறு: இருதரப்பை சேர்ந்த 7 பேர் மீது வழக்கு


மாடு மீது பஸ் மோதியதில் தகராறு: இருதரப்பை சேர்ந்த 7 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 2 Dec 2021 8:10 PM IST (Updated: 2 Dec 2021 8:10 PM IST)
t-max-icont-min-icon

மாடுகள் மீது எதிர்பாராதவிதமாக பஸ் மோதியது.போலீசார் இது சம்பந்தமாக 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

திருவள்ளூரை அடுத்த செஞ்சி பானம்பாக்கம் கிராமம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் ரஞ்சித் (வயது 41). இவர் செட்டிபேடு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பஸ் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ரஞ்சித்குமார் அந்த தனியார் பஸ்சில் 20 பெண்களை அழைத்துக்கொண்டு தொழிற்சாலை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

பஸ் வேப்பஞ்செட்டி விநாயகர் கோவில் அருகே சென்று கொண்டிருந்த போது, சாலையில் படுத்திருந்த மாடுகள் மீது எதிர்பாராதவிதமாக பஸ் மோதியது. இதைக்கண்ட அங்கிருந்த அதே பகுதியை சேர்ந்த நந்தகுமார், தமிழ்ச்செல்வன் ஆகியோர் ஓடிவந்து ரஞ்சித்தை தாக்கியுள்ளனர். பதிலுக்கு ரஞ்சித்தும், நந்தகுமார் தரப்பினரை தாக்கியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து இரு தரப்பினரும் தனித்தனியாக கடம்பத்தூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் இது சம்பந்தமாக நந்தகுமார், தமிழ்ச்செல்வன், ரஞ்சித், சிலம்பரசன், பரத், தியாகு, முருகன் ஆகிய 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.


Next Story