ஊட்டி வட்டாரத்தில் இல்லம் தேடி கல்வி திட்ட வகுப்புகள் தொடக்கம்


ஊட்டி வட்டாரத்தில் இல்லம் தேடி கல்வி திட்ட வகுப்புகள் தொடக்கம்
x
தினத்தந்தி 2 Dec 2021 8:28 PM IST (Updated: 2 Dec 2021 8:28 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டி வட்டாரத்தில் இல்லம் தேடி கல்வி திட்ட வகுப்புகள் தொடக்கம்

ஊட்டி

ஊட்டி வட்டாரத்தில் இல்லம் தேடி கல்வி திட்ட வகுப்புகளை முதன்மை கல்வி அலுவலர் நாசரூதின் தொடங்கி வைத்தார்.

இல்லம் தேடி கல்வி திட்டம்

ஊட்டி வட்டாரத்தில் உள்ள பி.மணிஹட்டி, அப்புகோடு, மேல்குந்தா, நுந்தளா, ஆடாசோலை, காவிலோரை, கே.கே.நகர், அனிக்கொரை, துளிதலை, இத்தலார் நஞ்சநாடு, கடநாடு உள்பட 19 இடங்களில் இல்லம் தேடி கல்வி திட்டம் கடந்த 1-ந் தேதி வகுப்புகள் தொடங்கப்பட்டது.

பி.மணிஹட்டி குடியிருப்பு பகுதியில் நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாசரூதின் தொடங்கி வைத்தார். இதில் ஊர் தலைவர் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

 இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நீலகிரி வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர்கள் விஜய்ராஜ், எழிலரசன், ஜமுனா மற்றும் பொறுப்பு மேற்பார்வையாளர் ஷீலா ஆகியோர் செய்து இருந்தனர்.

கற்றல் கற்பித்தல்

முன்னதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாசருதீன் கூறும்போது,
கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 19 மாத காலம் அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் கற்பித்தலில் ஒரு பெரும் இடைவேளை ஏற்பட்டது.

இந்த நிலையில் தமிழக முதல்-அமைச்சர் ஆலோசனையின் அடிப்படையில் பள்ளி மாணவர்களின் கற்றல் கற்பித்தலை ஈடுசெய்யும் வகையில் இல்லம் தேடி கல்வி என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் முழுமையாக தன்னார்வர்களை கொண்டு செயல்படுத்தப்படுகிறது என்று தெரிவித்தார். 


Next Story