கயத்தாறு அருகே வேன் கவிழ்ந்து சாலையில் பூக்கள் சிதறியதால் பரபரப்பு நிலவியது
கயத்தாறு அருகே வேன் கவிழ்ந்து சாலையில் பூக்கள் சிதறியதால் பரபரப்பு நிலவியது
கயத்தாறு:
கயத்தாறு அருகே வேன் கவிழ்ந்து சாலையில் பூக்கள் சிதறியதால் பரபரப்பு நிலவியது. வேனில் வந்த 2 பேர் காயங்களுடன் உயிர் தப்பினர்.
வேன் கவிழ்ந்தது
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு தாலுகா, நம்மாண்ட அல்லி, புதுத்தெருவை சேர்ந்த முத்துமாறன் மகன் சிவக்குமார் (வயது 21). இவர் நேற்று மாலை ஓசூரிலிருந்து நெல்லைக்கு ஒரு வேனில் பூ ஏற்றிக்கொண்டு வந்தார். அவருடன் கிளீனர் சரத்குமார் (21) என்பவரும் வேனில் இருந்தார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை தாண்டி வேன் சென்றது. கயத்தாறு அருகே தளவாய்புரம் பகுதியிலுள்ள நான்கு வழிச்சாலையில் வந்து கொண்டிருந்தபோது திடீரென்று வேன் நிலைதடுமாறி கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே கவிழ்ந்தது.
சாலையில் சிதறி பூக்கள்
இதில் சிவக்குமாரும், சரத்குமாரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். வேனில் இருந்த பூக்கள் சாலை முழுவதும் சிதறின.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. போக்குவரத்து சாலையில் நிறுத்தப்பட்டது. கயத்தாறு சுங்கச்சாவடி ஊழியர்கள் விரைந்து சென்று அந்த 2 பேரையும் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சாலை முழுவதும் பூக்கள் சிதறி கிடந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பெரும்பாலான பூக்கள் சாலையில் சிதறிய நிலையில், வேனில் இருந்த பூக்கூடைகள் சாலையோரத்தில் வைக்கப்பட்டன. மீட்பு வாகனம் மூலம் வேன் மீட்கப்பட்டது. பின்னர் அந்த சலையில் போக்குவரத்து சீரானது.
இதுகுறித்து கயத்தாறு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story