உடன்குடியில் நேற்று கோவை, சென்னை அரசு விரைவு பஸ்கள் திடீரென்று ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதி
உடன்குடியில் நேற்று கோவை, சென்னை அரசு விரைவு பஸ்கள் திடீரென்று ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதி
உடன்குடி:
உடன்குடி பஸ் நிலையத்தில் இருந்து தினமும் மாலை 4.30 அரசு விரைவு பஸ் ஒன்று சென்னைக்கும், மாலை 5.30 மணிக்கு அரசு விரைவு பஸ் ஒன்று கோவைக்கும் புறப்பட்டு செல்வது வழக்கம். இந்த இருபஸ்களும் தண்டுபத்து, காயாமொழி, திருச்செந்தூர், தூத்துக்குடி, மதுரை வழியாக இயக்கப்படுகின்றன. இந்த 2 அரசு விரைவு பஸ்களுக்கும் நேற்று மாலையில் இருந்து ஏராளமான பயணிகள் வந்து காத்திருந்தனர். இரவு 7 மணி வரை அந்த 2 பஸ்களும் வரவில்லை. இதுகுறித்து சம்மந்தப்பட்ட போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் பயணிகள் கேட்டபோது, முறையாக பதில் அளிக்க மறுத்தி விட்டனராம். நீண்ட நேரம் காத்திருந்த சென்னை, கோவை செல்ல வேண்டிய பயணிகள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
Related Tags :
Next Story