காரில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது


காரில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது
x
தினத்தந்தி 2 Dec 2021 9:59 PM IST (Updated: 2 Dec 2021 9:59 PM IST)
t-max-icont-min-icon

ஆண்டிப்பட்டி அருகே காரில் கஞ்சா கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆண்டிப்பட்டி: 

ஆண்டிப்பட்டி அருகே உள்ள க.விலக்கு பகுதியில் கஞ்சா கடத்தி செல்வதாக க.விலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று க.விலக்கு பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் ஒரு பையில் 8 கிலோ கஞ்சா இருந்தது. இதையடுத்து காரில் இருந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், ராஜதானி கிராமத்தை சேர்ந்த முருகன் மகன் காந்திமதி (வயது 36), உத்தமபாளையம் பகுதியை சேர்ந்த பொன்னையா மகன் கணேசன் (43), வரதராஜபுரம் கிராமத்தை சேர்ந்த பொன்ராம் மகன் கோகுல் (21) என்பதும், அவர்கள் விற்பனைக்காக கஞ்சாவை காரில் கடத்தி செல்வதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். மேலும் கஞ்சா மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

  

Next Story