போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன் பெண் தர்ணா
காதல் கணவரை சேர்த்து வைக்கக்கோரி, போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு பெண் தர்ணாவில் ஈடுபட்டார்.
திண்டுக்கல்
திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு நேற்று இளம்பெண் உள்பட 3 பேர் வந்தனர். பின்னர் திடீரென 3 பேரும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதால், அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், திண்டுக்கல் அருகே உள்ள தவசிமடையை அடுத்த விராலிபட்டியை சேர்ந்த கவுசல்யா (வயது 21) தனது பெற்றோருடன் தர்ணாவில் ஈடுபட்டது தெரியவந்தது.
மேலும் போலீசாரிடம் கவுசல்யா கூறுகையில், நான் திண்டுக்கல் பொன்னகரத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் படித்த போது என்னுடன் படித்த ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்த வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் என்னை காதலிப்பதாக கூறினார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் நான் மறுத்தேன்.
பின்னர் நாங்கள் சென்னையில் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து அங்கு குடும்பம் நடத்தினோம். நான் கர்ப்பமானதால், என்னை ஊபருக்கு அனுப்பினார். அதன்பின்னர் என்னை அவருடைய பெற்றோர் ஏற்க மறுப்பதாக கூறினார்.
மேலும் சிலருடன் வந்து என்னை மிரட்டியதோடு, கட்டாய கருக்கலைப்பு செய்தார். இந்த நிலையில் என்னை தொடர்ந்து மிரட்டி வருகிறார். இதனால் எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும். மேலும் உரிய நடவடிக்கை எடுத்து கணவரை என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும், என்றார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். அதன்பேரில் அவர் பெற்றோருடன் திரும்பி சென்றார்.
Related Tags :
Next Story