தேசிய கீதத்தை அவமதித்ததாக மம்தா பானர்ஜி மீது பா.ஜனதா புகார்


படம்
x
படம்
தினத்தந்தி 2 Dec 2021 10:14 PM IST (Updated: 2 Dec 2021 10:14 PM IST)
t-max-icont-min-icon

தேசிய கீதத்தை அவமதித்ததாக மம்தா பானர்ஜி மீது பா.ஜனதா புகார் அளித்து உள்ளது.

மும்பை, 

தேசிய கீதத்தை அவமதித்ததாக மம்தா பானர்ஜி மீது பா.ஜனதா புகார் அளித்து உள்ளது.

பா.ஜனதா புகார்

மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி மும்பைக்கு 3 நாள் சுற்றுப்பயணம் வந்து உள்ளார். அவர் மும்பையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து பேசினார்.

இந்தநிலையில் மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மம்தா பானர்ஜி, தேசிய கீதத்தை அவமதித்ததாக அவர் மீது பா.ஜனதா புகார் அளித்து உள்ளது. 

இது குறித்து மும்பை பா.ஜனதா செயலாளர் விவேகானந்த் குப்தா மும்பை போலீஸ் கமிஷனருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில், "மம்தா பானர்ஜி தேசிய கீதத்தை நிறுத்திய செயல் அதை அவமதித்ததை காட்டுகிறது. தேசிய மரியாதை அவமதிப்பு தடுப்பு சட்டம் 3-ன் படி அவர் தவறு செய்து உள்ளார்" என கூறியுள்ளார்.

வழக்குப்பதிவு

மேலும் தேசிய கீதத்தை அவமதித்தற்காக மம்தா பானர்ஜி மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார். 

இதேபோல எப்போது தேசிய கீதம் ஒலித்தாலும் அல்லது பாடப்பட்டாலும் பார்வையாளர்கள் எழுந்து இருக்க வேண்டும் என்ற 2015-ம் ஆண்டின் மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவையும் மம்தா பானர்ஜி மீறியிருப்பதாக அவர் குற்றம்சாட்டி உள்ளார்.



Next Story