மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல முடியாமல் அவதி
புஷ்பவனம் கடற்கரையில் கடல் சேறு படர்ந்திருப்பதால் மீன்வர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்
வேதாரண்யம்:
புஷ்பவனம் கடற்கரையில் கடல் சேறு படர்ந்திருப்பதால் மீன்வர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
வெயில் அடிக்கிறது
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா புஷ்பவனம் மீனவ கிராமத்தில் நூற்றுக்கணக்கான பைபர் படகுகள் உள்ளன. தினமும் காலை மற்றும் மாலை வேலைகளில் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். கடந்த வாரம் மழை மற்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக வெயில் அடித்து வருகிறது. இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். ஆனால் புஷ்பவனம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடியாத நிலை தற்போது உருவாகியுள்ளது.
கடல் சேறு
கடல் சீற்றம் காரணமாக 150 மீட்டர் தூரத்திற்கு கடலில் இருந்து 2 அடி முதல் 4 அடி வரை சேறு கரை ஒதுங்கி கிடக்கிறது. இதனால் படகுகளை கடற்கரையில் இருந்து கடலுக்கு கொண்டு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். கடற்கரை முழுவதும் சேறு படிந்துள்ளதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த கடல் சேறு அலைகளில் கரைந்து மீண்டும் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல 20 நாட்களுக்கும் மேலாகும் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே 10 நாட்களாக மீன் பிடிக்க செல்லாமல் இருந்த நிலையில் தற்போது கடல் சேறு காரணமாக இன்னும் 20 நாட்கள் மீன்பிடிக்க செல்ல காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கும் என மீனவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story