தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டியில் வெளிவந்த செய்திகள் வருமாறு:-
சேறும், சகதியுமான சாலை
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் வட்டம் வேப்பஞ்சேரி ஊராட்சிமேலதண்ணிலப்பாடி செல்லும் சாலை சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விடுகிறார்கள். பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமப்படுகிறர்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேறும், சகதியுமாக காணப்படும் சாலையை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், வேப்பஞ்சேரி.
பழுதடைந்த மின்கம்பம்
திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகா ஸ்டாலின் நகரில் உள்ள மின்கம்பம் பழுதடைந்து உள்ளது. மின்கம்பத்தில் சிமெண்டு காரைகள் பெயந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. இந்த மின்கம்பம் எந்த நேரமும் சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதடைந்த மின்கம்பத்தை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், ஸ்டாலின் நகர்.
தார்ச்சாலை வேண்டும்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா வடகரை இக்பால் தெருவில் தார்சாலை அமைக்க செம்மண் போட்டு விட்டு சாலைபோடாமல் அப்படியே கிடப்பில் போட்டு விட்டனர். மேலும் மழை பெய்ததால் சாலை சேறும், சகதியமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல மிகவும் சிரமப்படுகிறர்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தார்ச்சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இக்பால் தெருவாசிகள் வடகரை.
Related Tags :
Next Story