நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலி சாவு எண்ணிக்கை 508 ஆக அதிகரிப்பு


நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலி சாவு எண்ணிக்கை 508 ஆக அதிகரிப்பு
x
தினத்தந்தி 2 Dec 2021 10:52 PM IST (Updated: 2 Dec 2021 10:52 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலி சாவு எண்ணிக்கை 508 ஆக அதிகரிப்பு

நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு முதியவர்கள் 2 பேர் பலியாகினர். இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 508 ஆக அதிகரித்து உள்ளது.
முதியவர்கள் 2 பேர் பலி
நாமக்கல் மாவட்டத்தில் சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை கொரோனாவுக்கு 506 பேர் பலியாகி இருந்தனர். இந்த நிலையில் நேற்று சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எலச்சிபாளையம் பகுதியை சேர்ந்த 75 முதியவர் மற்றும் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த நெட்டவேலாம்பாளையம் பகுதியை சேர்ந்த 74 முதியவர் என 2 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால் நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு பலியான நபர்களின் எண்ணிக்கை 508 ஆக அதிகரித்து உள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் ஏற்கனவே 53,534 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதற்கிடையே பிற மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 3 பேரின் பெயர் நாமக்கல் மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் இம்மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 53,537 ஆக அதிகரித்தது.
இதற்கிடையே நேற்று புதிதாக 45 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் இதுவரை பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 53 ஆயிரத்து 582 ஆக அதிகரித்து உள்ளது.
494 பேருக்கு சிகிச்சை
இந்த நிலையில் நேற்று 36 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இம்மாவட்டத்தில் இதுவரை 52,580 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். மீதமுள்ள 494 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Next Story