இருப்பு வைத்த வெங்காயம் முளைத்தது
பல்லடம் பகுதியில் விலை உயரும் என்ற நம்பிக்கையில் இருப்பு வைத்த வெங்காயம் முளைக்கத் தொடங்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
பல்லடம்
பல்லடம் பகுதியில் விலை உயரும் என்ற நம்பிக்கையில் இருப்பு வைத்த வெங்காயம் முளைக்கத் தொடங்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
சின்ன வெங்காயம்
பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் சின்ன வெங்காயம் பயிரிடுகின்றனர். ஒரு ஏக்கருக்கு விதை வெங்காயம், நாற்று நடவு கூலி, மற்றும் அறுவடைக் கூலி என ரூ.1 லட்சம் செலவாகிறது. நல்ல விளைச்சல் இருந்தால் ஏக்கருக்கு 6 முதல் 8 டன் வரை வெங்காயம் கிடைக்கும். இந்த நிலையில் கடந்த மாதங்களில் கிலோ 30 ரூபாய்க்கு விற்ற சின்ன வெங்காயம் தற்போது 15 ரூபாய்க்கு விற்கிறது. விலை குறைவானதால் பல்லடம் பகுதியில் உள்ள விவசாயிகள் வெங்காயம் விலை உயரும் என்ற நம்பிக்கையில் பட்டறைகள் அமைப்பு வெங்காயத்தை இருப்பு வைத்தனர்.
ஆனால் வெங்காயம் விலை உயரவில்லை. இதற்கிடையே இருப்பு வைக்கப்பட்ட வெங்காயம் முளைவிட தொடங்கியுள்ளன. இதனால் வெங்காயத்தை கிடைத்த விலைக்கு விற்க வேண்டிய நிலைக்கு விவசாயிகள் ஆளாகியுள்ளனர்.
இதுகுறித்து வெங்காய விவசாயி அல்லாளபுரம் செந்தில் குமார் கூறியதாவது:-
முளைத்து விட்டது
வெங்காயம் அறுவடை செய்தவுடன் உரிய விலை கிடைக்காததால் பட்டறை போட்டு இருப்பு வைத்தோம். ஆனால் விலை உயரவில்லை. இருப்பு வைத்து வெங்காயமும் முளைக்கத் தொடங்கிவிட்டது. தரமான வெங்காயம் இருந்தால் மட்டுமே வியாபாரிகள் வெங்காயத்தை வாங்குவார்கள். வெங்காயம் முளை விட்டுள்ளதால், கிடைத்த விலைக்கு விற்க வேண்டிய நிலைக்கு விவசாயிகள் ஆளாகியுள்ளோம். விவசாய விளைபொருட்களை உரிய விலை கிடைக்காதபோது அரசு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யவேண்டும். அப்போதுதான் விவசாயத்தை காப்பாற்ற முடியும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்
Related Tags :
Next Story