திருப்பத்தூர் மாவட்டத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை
திருப்பத்தூர் மாவட்டத்தில் நீர்நிலை பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை நோட்டீஸ் வழங்கி அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்தார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் நீர்நிலை பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை நோட்டீஸ் வழங்கி அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்தார்.
ஆய்வு கூட்டம்
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், நீர்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம மற்றும் நகர்ப்புற பகுதிகளிலுள்ள நீர்நிலை அருகாமையில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகள், வணிக வளாக கட்டிடங்கள், கடைகள், விவசாய நிலங்கள் ஆகியவற்றின் ஆவணங்களை சரிபார்த்து ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள குடியிருப்புகள், வணிக வளாக கட்டிடங்கள் மற்றும் கடைகளின் எண்ணிக்கையின் விவரங்ளை தமிழக அரசுக்கு அனுப்புவதற்கு ஒரு அறிக்கை தயார் செய்ய வேண்டும்.
நோட்டீஸ்
ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளில் உள்ள நபர்களின் எண்ணிக்கையை சேகரித்து ஒரு அறிக்கை தயார் செய்து நாளைக்குள் சமர்ப்பிக்க வேண்டும். ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது உறுதி என தெரியும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட துறைகளின் மூலம் நோட்டீஸ் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையாபாண்டியன், மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயன், உதவி இயக்குனர் (பஞ்சாயத்து) விஜயகுமாரி மற்றும் அனைத்து தாசில்தார்கள், நகராட்சி ஆணையாளர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story