சேந்தமங்கலம் அருகே பள்ளி மாணவி தீக்குளித்து தற்கொலை
சேந்தமங்கலம் அருகே பள்ளி மாணவி தீக்குளித்து தற்கொலை
சேந்தமங்கலம்:
சேந்தமங்கலம் அருகே உள்ள மிதிகுண்டு கிராமத்தை சேர்ந்தவர் கமல் (வயது 47). இவருடைய மகள் கயானா (13). இவர் பேளுக்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 15-ந் தேதி வீட்டில் இருந்த கயானா செல்போனில் விளையாடி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்த பெற்றோர் படிக்காமல் ஏன் நேரத்தை வீணடித்து கொண்டிருக்கிறாய் என்று திட்டியதாக தெரிகிறது.
இதனால் மனமுடைந்த கயானா திடீரென வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை உடலில் ஊற்றி தீ வைத்தார். இதை கண்டு கதறிய பெற்றோர் தீக்காயங்களுடன் துடித்த கயானாவை மீட்டு சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். கடந்த 16 நாட்களாக அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த கயானா சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக இறந்தார். அவரது உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதது கண் நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. இதுகுறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கயானாவின் உடல் சேந்தமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
Related Tags :
Next Story