கறம்பக்குடி அருகே மயான கொட்டகை இல்லாததால் வெட்டவெளியில் பிணத்தை எரிக்கும் அவலம்
மயான கொட்டகை இல்லாததால் வெட்டவெளியில் பிணத்தை எரிக்கும் அவலம் ஏற்பட்டது.
கறம்பக்குடி:
கறம்பக்குடி அருகே குழந்திரான்பட்டு ஊராட்சியில் பில்லக்குறிச்சி கிராமம் உள்ளது. இங்கு மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கான மயான இடம் அதே பகுதியில் கருவேல மரங்கள் அடர்ந்த பகுதியில் உள்ளது. மயான கொட்டகை இல்லை. இதனால் யாராவது இறந்தால் வெட்டவெளியில் பிணத்தை எரிக்கும் அவலநிலை உள்ளது. தற்போது தொடர் மழை பெய்து வரும் நிலையில் இறந்தவர்களை தகனம் செய்ய அப்பகுதி மக்கள் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். இறந்தவர்களின் சிதையை சுற்றி சாக்கு பையை பிடித்தபடி உடல் எரிந்து முடியும் வரை காத்திருக்க வேண்டி உள்ளது. இதனால் உறவினர்கள் பெரும் துயரபடுகின்றனர். எனவே பில்லக்குறிச்சி கிராமத்தில் மயான கொட்டகை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story