தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 2 Dec 2021 11:52 PM IST (Updated: 2 Dec 2021 11:53 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி

பள்ளத்தால் ஆபத்து

  திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் வந்தவாசி சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. அதில் மழைநீர் தேங்கி உள்ளது. அதன் அருகில் ஒரு குழி உள்ளது. அந்தக் குழியிலும் தண்ணீர் உள்ளது. அந்த வழியாக நடந்து செல்வோரும், வானங்களில் செல்வோரும் சிரமப்படுகின்றனர். இரவில் வரும்போது ஒருசில வாகனங்கள் விபத்தில் சிக்கி விடுகிறது. ஆபத்தான பள்ளத்தை மூட. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
  -எஸ்.பாபு, சேத்துப்பட்டு.

சிறு பாலம் கட்டித்தர வேண்டும்

  திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுகா அக்ராபாளையம் கிராமத்தில் ஆரணி-வேலூர் சாலையில் இருந்து காவனூர், திமிரி, ஆற்காடு சாலைகளை இணைக்கும் அக்ராபாளையம் கிராமத்தில் 4 முனை ரோடு சந்திப்பில் சமீபத்தில் பெய்த மழையால் அங்குள்ள ஒரு சிறு பாலம் கால்வாயில் அடித்துச்செல்லப்பட்டது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. அருகில் உள்ள பள்ளி, கல்லூரிக்கு பஸ்கள் இந்த வழியாக இயக்கப்படுகிறது. கிராமத்துக்கு வந்து சென்ற ஒரு மினி பஸ்சும் இயக்கப்படாமல் உள்ளதால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் சிரமப்பட்டு வருகிறார்கள். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து அந்தப் பகுதியில் ஒரு சிறு பாலம் கட்டித்தர வேண்டும்.
  -ஆ.கண்ணதாசன், அக்ராபாளையம்.

பெயர் பலகை வேண்டும்

  குடியாத்தம்-காட்பாடி இடையே செல்லும் டவுன் பஸ் இது. இந்த பஸ்சின் பின்பக்கம் இருந்து பார்த்தால் எந்த ஊருக்கு பஸ் செல்கிறது? என்பது தெரியாதபடி ஸ்டிக்கர்கள் அழிந்தும் பின்பக்க முகப்பு பழுதடைந்தும் பெயர் பலகையே இல்லாமல் உள்ளது. அரசு டவுன் பஸ் இப்படி இருந்தால் பயணிகள் எப்படி பயன்படுத்துவார்கள்?
  -செந்தமிழ்கூத்தன், குடியாத்தம்.

கரும்பு, நெற்பயிரை சூழ்ந்த மழைநீர்

  ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஒன்றியம் இளையநல்லூர் ஊராட்சி எம்.ஜி.ஆர்.நகர் ஜெங்காலபள்ளி மாந்தாங்கல் கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரிக்கு செல்லும் ஓடைக்கால்வாயை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். கால்வாய் தூர்வாரப்படாததால் 50 ஏக்கருக்குமேல் பயிரிடப்பட்டுள்ள கரும்பு, நெற்பயிர் மழைநீரால் சூழப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றி தூர்வாரி தேங்கிய மழைநீரை வடிய வைப்பார்களா?
  -சுப்பிரமணி, இளையநல்லூர்.

கிடப்பில் போடப்பட்ட சாலை பணி

  திருவண்ணாமலை மாவட்டம் கோழிப்புலியூர் கூட்ரோட்டில் இருந்து பெரணமல்லூர் செல்லும் தார் சாலையில் தரைப்பாலம் ஒன்று புதிதாக கட்டப்பட்டது. அந்தச்சாலையில் ஜல்லிக்களை கொட்டி அப்படியே விட்டு விட்டனர். கிடப்பில் போடப்பட்ட சாலை சீரமைப்பு பணியை முடிக்க வேண்டும்.
  -பகலவன், சேத்துப்பட்டு.
  

Next Story