மின்சாரம் தாக்கி கொத்தனார் பலி


மின்சாரம் தாக்கி கொத்தனார் பலி
x
தினத்தந்தி 2 Dec 2021 11:57 PM IST (Updated: 2 Dec 2021 11:57 PM IST)
t-max-icont-min-icon

கோட்டூர் அருகே மின்சாரம் பாய்ந்து கொத்தனார் பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோட்டூர்:
கோட்டூர் அருகே மின்சாரம் பாய்ந்து கொத்தனார் பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மின்சாரம் தாக்கி கொத்தனார் பலி
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே வடக்கு வாட்டார் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது 45). இவருடைய மனைவி பானுமதி.  திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை.
கொத்தனார் வேலை செய்து வரும் சங்கர் நேற்று வீட்டில் மின் இணைப்பு இல்லாததை அறிந்து அதனை சரிசெய்து கொண்டு இருந்தார். இந்தநிலையில் வயரில் மின்சாரம் பாய்வதை அறியாமல் வயரை பல்லால் கடித்து இழுத்து உள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சங்கர் தூக்கி எறியப்பட்டார். 
உடனே அருகில் இருந்தவர்கள் சங்கரை மீட்டு சிகிச்சைக்காக மன்னார்குடியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், சங்கர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
போலீசார் விசாரணை
 இதையடுத்து சங்கரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து திருக்களார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமாவதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Next Story