22½ கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; டிரைவர் கைது
தவிட்டுப்பாளையம் சோதனைச்சாவடியில் 22½ கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.
நொய்யல்,
வாகன சோதனை
தவிட்டுப்பாளையம் சோதனைச்சாவடியில் வேலாயுதம்பாளையம் இன்ஸ்பெக்டர் வினோதினி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது பரமத்தி வேலூரில் இருந்து வேலாயுதம்பாளையம் நோக்கி சேலம்- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்ற சரக்கு வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அரசால் தடை செய்யப்பட்ட 22½ கிலோ எடையுள்ள புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
டிரைவர் கைது
இதையடுத்து, விற்பனைக்காக கொண்டு சென்ற புகையிலை பொருட்கள், ரூ.8,500 மற்றும் சரக்கு வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், சரக்கு வாகனத்தை ஓட்டி சென்ற திருக்காடுதுறையை சேர்ந்த ரமேஷ் (வயது 31) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை ரமேஷ் யாரிடம் இருந்து வாங்கினார். இதனை விற்பதற்காக எங்கு கொண்டு சென்றார் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story