‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 3 Dec 2021 12:27 AM IST (Updated: 3 Dec 2021 12:27 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பாதாள சாக்கடை மூடி மூடப்படுமா?
திருச்சி மாவட்டம் வள்ளலார் தெரு, கிழக்கு குறிஞ்சி நகரில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட குழியை மூடாமல் ஊழியர்கள் சென்று விட்டனர். இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்பவர்கள் கீழே விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதனை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜா, வள்ளலார் தெரு, திருச்சி.
சாலையில் தேங்கும் மழைநீர்
திருச்சி மாவட்டம், மணப்பாறை ஆளிபட்டியில் பெய்து வரும் தொடர் மழையால் இ்ங்குள்ள சாலைகள் சேதம் அடைந்து உள்ளன. இதனால் அவ்வப்போது விபத்து ஏற்பட்டு வருகிறது. மேலும், அரசு தொடக்கப்பள்ளி முன்பு தேங்கி நிற்கும் மழைநீரால் பள்ளி மாணவ-மாணவிகள் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாகரெத்தினம், ஆளிபட்டி, திருச்சி.
சுகாதார சீர்கேடு
திருச்சி மாவட்டம் பாலக்கரை ஜெயில் பேட்டையில் குடிசை மாற்று வாரியம் 19-வார்டில் பாதளசாக்கடையில் மனித கழிவு கலக்கிறது. மேலும், கழிவுநீர் செல்ல வழியில்லாமல் குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவுவதுடன், பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வள்ளி, பாலக்கரை, திருச்சி.
தெருவில் சுற்றும் மாடுகள்
திருச்சி மாவட்டம் மேலக்கல்கண்டார் கோட்டை, விவேகானந்தர் நகரில் மாடுகள் சகஜமாக சுற்றுத்திரிகின்றன. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்வதில் இடையூறு ஏற்படுகிறது. மேலும், இப்பகுதியில் சாைல மற்றும் மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கீதா, திருச்சி.
பாலத்தை சீரமைக்க கோரிக்கை
திருச்சி மாவட்டம், லால்குடி தாலுகா, நெருஞ்சலக்குடி ஊராட்சியை சார்ந்த மாந்துரை பகுதியில் மலட்டாறு பாலம் உள்ளது. இந்த பாலம் தற்போது வலுவிழந்து காணப்படுகிறது. மேலும், இந்த பாலத்தின் அருகே பெரிய பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த பாலத்தை சீரமைக்க வேண்டும்.
சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் மேலூரில் பாதாள சாக்கடை புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் வீடுகளில் இணைப்பு இன்னும் கொடுக்கவில்லை. இந்தநிலையில் கழிவு நீர் சாலையில் வழிந்தோடுகிறது. உபயோகத்திற்கு முன்பே கழிவு நீர் வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த பாதாள சாக்கடை அமைப்பை ஆய்வு செய்து சரி செய்ய வேண்டும்.
தயாநிதி, ஸ்ரீரங்கம் திருச்சி.

Next Story