நாளை மின்தடை


நாளை மின்தடை
x
தினத்தந்தி 3 Dec 2021 12:37 AM IST (Updated: 3 Dec 2021 12:37 AM IST)
t-max-icont-min-icon

சூலக்கரை ஜி.என்.பட்டி பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.

விருதுநகர், 
விருதுநகர் அருகே உள்ள ஜி.என். பட்டி துணை மின் நிலையத்தில் ஆற்றல் திறனை அதிகரிப்பதற்கான ஆயத்த  பணிகள் நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. ஆதலால் இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான ஆமத்தூர், நாட்டார்மங்கலம், வெள்ளூர், சிதம்பராபுரம், செவலூர், காருசேரி, மத்தியசேனை, முத்துலாபுரம், புதுக்கோட்டை, மூளிப்பட்டி, ஆகிய பகுதிகளில் நாளை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை மின்வினியோகம் இருக்காது. அதேபோல சூலக்கரைதுணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இத்துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினிேயாகம் பெறும் பகுதிகளான சூலக்கரை, கலெக்டர் அலுவலக வளாகம், ஆயுதப்படை குடியிருப்பு, மாடர்ன் நகர், கூரைக்குண்டு, தாதம்பட்டி, கே. செவல்பட்டி, மீசலூர், மாத்திநாயக்கன்பட்டி, தொழிற்பேட்டை ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும். மேற்கண்ட தகவலை  மின் வாரிய நிர்வாக என்ஜினீயர் அகிலாண்டேஸ்வரி கூறினார்.

Next Story