வாடகை செலுத்தாத கடைகளுக்கு ‘சீல்’


வாடகை செலுத்தாத கடைகளுக்கு ‘சீல்’
x
தினத்தந்தி 3 Dec 2021 12:43 AM IST (Updated: 3 Dec 2021 12:43 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசி பகுதியில் வாடகை செலுத்தாத கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

சிவகாசி, 
சிவகாசி பகுதியில் வாடகை செலுத்தாத கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. 
வணிக வளாகம் 
சிவகாசி மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகங்கள் பல்வேறு இடங்களில் உள்ளது. இந்த நிலையில் நீண்ட நாட்களாக கடை வாடகை செலுத்தாத கடையின் உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாநகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி கடந்த சில நாட்களுக்கு முன்னர் உத்தரவிட்டார். 
இதனை தொடர்ந்து மாநகராட்சியில் வருவாய் பிரிவு அதிகாரி சரவணன் சம்பந்தப்பட்ட கடையின் உரிமையாளர்களுக்கு உரிய தகவல் தெரிவித்து வாட கையை செலுத்த வலியுறுத்தினர். இதை தொடர்ந்து பலர் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களை செலுத்தினர். 
வாடகை பாக்கி 
4 கடையின் உரிமையாளர்கள் மட்டும் உரிய கட்டண தொகையை செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதை தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் சிவகாசி சிவன்கோவில் அருகில் உள்ள வணிக வளாகத்தில் இயங்கி வந்த 2 கடைகளுக்கும், புதுரோட்டில் இயங்கி வரும் மீன் மார்க்கெட்டில் செயல்பட்ட 2 கடைகளுக்கும் ‘சீல்’ வைத்தனர். இந்த 4 கடைகளில் இருந்து மட்டும் மாநகராட்சிக்கு ரூ.6 லட்சத்து 30 ஆயிரம் வாடகை கட்டணம் பாக்கி இருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story