மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
சிவகாசியில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
சிவகாசி,
சிவகாசி உசேன் காலனியில் வசித்து வருபவர் லிங்கராஜா (வயது 33). இவரது வீட்டில் கட்டிட பணி நடந்து வந்தது. இந்த பணியில் எம்.முருகன் காலனியை சேர்ந்த தங்கமாரியப்பன் (25) அவரது அண்ணன் கண்ணன் (28), தங்கேஸ்வரன் (40) ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக 3 பேர் மீது மின்சாரம் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் கண்ணன் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தில் தங்கமாரியப்பன், தங்கேஸ்வரன் இருவரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இந்த சம்பவம் குறித்து தங்கமாரியப்பன் சிவகாசி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வீட்டின் உரிமையாளர் லிங்கராஜா, என்ஜினீயர் மாரிக்கனி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story