தேசிய மாணவர் படை மாணவிக்கு பாலியல் தொல்லை; பேராசிரியர் கைது
தேசிய மாணவர் படை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியரை போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
தேசிய மாணவர் படை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியரை போலீசார் கைது செய்தனர்.
பாலியல் தொல்லை
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள ஒரு கல்லூரியில் தாவரவியல் பேராசிரியர், டென்சிங் பாலையா (வயது 48.) இவர் தேசிய மாணவர் படையையும் கவனித்து வந்தார்.
இதே கல்லூரியில் ராஜபாளையம் பகுதியை சேர்ந்த மாணவி 2-ம் ஆண்டு படித்து வந்தார். அவரும் தேசிய மாணவர் படையில் சேர்ந்து பயிற்சி பெற்று வந்துள்ளார்.
இந்தநிலையில் அந்த மாணவிக்கு, பேராசிரியர் டென்சிங் பாலையா, தேசிய மாணவர் படை தொடர்பாக பயிற்சிக்கு சென்ற இடங்கள் உள்பட பல்வேறு இடங்களில் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
கைது
இதுகுறித்து அந்த மாணவி, தன்னுடைய பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து அந்த மாணவியின் தந்தை, ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பேராசிரியர் டென்சிங் பாலையாவை கைது செய்தனர். பின்னர் அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதையடுத்து டென்சிங் பாலையா அருப்புக்ேகாட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.
Related Tags :
Next Story