போராட்டத்தில் ஈடுபட்ட 75 பேர் மீது வழக்கு பதிவு


போராட்டத்தில் ஈடுபட்ட 75 பேர் மீது வழக்கு பதிவு
x
தினத்தந்தி 3 Dec 2021 1:20 AM IST (Updated: 3 Dec 2021 1:20 AM IST)
t-max-icont-min-icon

போராட்டத்தில் ஈடுபட்ட 75 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது

திருச்சி
திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று முன்தினம் மல்லியம்புத்தூர் பஞ்சாயத்து தலைவர் விக்னேஸ்வரன் தலைமையில் ஏராளமானோர் போராட்டம் நடத்தினர். அதாவது கொலையுண்ட ரியல் எஸ்டேட் அதிபர் சோலை சிவா என்ற சிவகுமார் உடலை வாங்க மறுத்தும், அவரை கொலை செய்தவர்களை கைது செய்யக்கோரியும் இந்த போராட்டம் நடந்தது. எவ்வித அனுமதியும் இன்றி போராட்டம் நடத்தியதுடன் கொரோனா நோய்த்தொற்று பரவலுக்கு வழிவகுப்பதாக கூறியும், பஞ்சாயத்து தலைவர் விக்னேஸ்வரன் உள்பட 75 பேர் மீது திருச்சி செசன்ஸ் கோர்ட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இதுபோல திருச்சி மாநகராட்சி அலுவலகம் முன்பு அடிப்படை வசதி கேட்டு போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பஞ்சப்பூர் பகுதி செயலாளர் வேலுசாமி உள்பட 14 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Next Story