சிவன் கோவில்களில் நந்தி பெருமானுக்கு சிறப்பு வழிபாடு


சிவன் கோவில்களில் நந்தி பெருமானுக்கு சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 2 Dec 2021 7:59 PM GMT (Updated: 2 Dec 2021 7:59 PM GMT)

சிவன் கோவில்களில் நந்தி பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

பெரம்பலூர்:
பிரதோஷத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் நந்தி பெருமானுக்கு நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதில், பிரசித்தி பெற்ற இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோவில், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற பெரம்பலூர் அகிலாண்ேடஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவில், துறைமங்கலம் மீனாட்சி சமேத சொக்கநாதர் கோவில், சு.ஆடுதுறையில் உள்ள குற்றம்பொறுத்தீஸ்வரர் கோவில், செட்டிகுளத்தில் ஏகாம்பரேஸ்வரர் கோவில், குரும்பலூர் பஞ்சநந்தீஸ்வரர் கோவில், வெங்கனூர் விருத்தாச்சலேஸ்வரர் கோவில், திருவாளந்துறை தோளீஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் உள்ள நந்தி பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி கோவில்களில் உள்ள நந்தி பெருமானுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் நந்தி பெருமானை தரிசனம் செய்தனர்.

Next Story