பள்ளியில் புகுந்த 5 பாம்புகள்
பள்ளியில் புகுந்த 5 பாம்புகளை ஆசிரியர்கள் அடித்து கொன்றனர்.
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சோழன்குடிக்காடு கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுமார் 394 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். நேற்று காலை மாணவர்கள் பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறைக்கு சென்றபோது சுமார் 5 பாம்புகள் ஒன்றாக இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அலறினர். மேலும் உடனடியாக இதுபற்றி பள்ளியின் தலைமை ஆசிரியர் வீரமணியிடம் மாணவர்கள் அச்சத்துடன் கூச்சலிட்டபடி கூறினார்கள். இதையடுத்து பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களின் நலன் கருதி துரிதமாக செயல்பட்டு 5 பாம்புகளையும் அடித்து கொன்றனர். இதனால் பள்ளி வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story