வரத்தான் குளத்தில் குப்பைகளை அகற்றி தூய்மைப்படுத்திய கிராம மக்கள்
வரத்தான் குளத்தில் குப்பைகளை கிராம மக்கள் அகற்றி தூய்மைப்படுத்தினர்.
குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள அந்தூர் கிராமத்தில் குடிநீர் ஆதாரமாக விளங்கும் வரத்தான் குளம், 15 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பெய்த வடகிழக்கு பருவ மழையின் காரணமாக நிரம்பி கடையோடியது. இதற்கிடையே அந்தூர் கிராமத்தில் குடிநீர் பிரச்சினை ஆண்டுதோறும் கோடை காலங்களில் ஏற்படும். இந்த ஆண்டு குன்னம் தாலுகாவில் அதிக கனமழை பெய்ததன் காரணமாக ஏரி, குளங்கள் நிரம்பின. இதன்படி வரத்தான் குளமும் நிரம்பி வழிந்ததால் அந்தூர் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேலும் இந்த குளத்திற்கு வயல்வெளியில் இருந்து நீர்வரத்து உள்ளதால் குப்பை, கூளங்கள் மற்றும் பாசி ஆகியவை குளம் முழுக்க குவியல் குவியலாக காணப்பட்டது. இதைப் பார்த்த கிராம மக்கள் குப்பைகளை அகற்ற முடிவு செய்தனர். இதையடுத்து சமூக ஆர்வலர் ஜெகதீசன் மற்றும் 20-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் என அனைவரும் ஒன்றுபட்டு குப்பை மற்றும் குளத்தில் படிந்த பாசிகளை அகற்றி குளத்தை தூய்மைப்படுத்தினார்கள். மேலும் குளத்து நீரை குடிநீராக பயன்படுத்த ஏற்புடையதாக செய்தனர்.
Related Tags :
Next Story