ஊராட்சி ஒன்றிய அலுவலர் வீட்டில் நகை- பணம் திருட்டு
ஊராட்சி ஒன்றிய அலுவலர் வீட்டில் நகை- பணம் திருட்டு போனது.
திருப்பத்தூர்
ஊராட்சி ஒன்றிய அலுவலர் வீட்டில் நகை- பணம் திருட்டு போனது.
வீட்டின் கதவு உடைப்பு
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே குறிஞ்சி நகர் பகுதியைச் சேர்ந்தவர் முரளி. இவர் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பதிவறை எழுத்தராக பணிபுரிந்து வருகிறார். அவரது மனைவி துர்கா தேவி தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.
இந்தநிலையில் இருவரும் நேற்று பணிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்ட நிலையில் இருந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் திருக்கோஷ்டியூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
விசாரணை
மேலும் சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் சேது தலைமையிலான போலீசார் வீட்டில் உடைக்கப்பட்டு இருந்த பீரோ மற்றும் லாக்கர் உள்ளிட்டவைகளை சோதனை செய்தனர்.
அதில் வைக்கப்பட்டிருந்த 12 கிராம் நகை, ரூ.5 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து திருக்கோஷ்டியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story