தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
மூடப்படாத பாதாள சாக்கடை
சேலம் அழகாபுரம் எல்லம்மாள் காலனியில் சாலையின் நடுவே பாதாள சாக்கடை பணிக்காக திறக்கப்பட்ட குழிகள் மூடப்படாமல் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாகுகின்றனர். எனவே விபத்துக்கள் நடக்கும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து பாதாள சாக்கடை குழியை மூடி போட்டு சரி செய்ய வேண்டும்.
-ஊர்மக்கள், அழகாபுரம், சேலம்.
தார் சாலை சீரமைக்கப்படுமா?
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா வி.புதுப்பாளையம் கிராமத்தில் தார் சாலை குண்டும், குழியுமாக பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் தெரு விளக்கு இல்லாததால் இரவு நேரங்களில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைத்து தெருவிளக்குகள் அமைக்க வேண்டும்.
-ஊர்மக்கள், வி.புதுப்பாளையம், நாமக்கல்.
சேலம் நேதாஜி தெருவில் சாலை சீரமைக்கப்படாததால் மிகவும் மோசமாக உள்ளது. இதுபற்றி புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும்.
-ஊர்மக்கள், நேதாஜி தெரு, சேலம்.
சேலம் போலீஸ் கமிஷனர் அலுவலகம் பின்புறம் அமைந்துள்ள லைன்ரோடு தெற்கு தெரு, 4 ரோடு இணைப்பு ஆகிய பகுதிகளில் உள்ள சாலை மிகவும் குண்டும், குழியுமாக உள்ளது. மழைக்காலங்களில் மழைநீர் சாலையில் ஆறாக ஓடுகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். புகார் கொடுத்தும் பலன் இல்லை. எனவே மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்மக்கள், சேலம்.
சேலம் தாதகாப்பட்டி பென்சன் வேலு தெரு தபால் நிலையம் அருகில் உள்ள சாலை குண்டும், குழியுமாக பல வருடங்களாக இதே நிலையில் காட்சி அளிக்கிறது. மிக முக்கியமான சாலை என்பதால் வாகன ஓட்டிகள், பள்ளி மாணவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாகுகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி அந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பாலாஜி, தாதகாப்பட்டி, சேலம்.
வீணாகும் குடிநீர்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா பேரண்டப்பள்ளி ஊராட்சி பத்தலப்பள்ளி மார்க்கெட் சர்வீஸ் ரோடு அட்கோ போலீஸ் நிலையம் அருகில் குடிதண்ணீர் குழாய் உடைந்ததால் தண்ணீர் வீணாக சாலையில் ஆறாக ஓடுகிறது. மேலும் பாஸ்கர்தாஸ் நகரில் இருந்து கழிவுநீர் சர்வீஸ் ரோட்டிலேயே வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் அருகிலேயே பஸ் நிறுத்தம் உள்ளது. இதனால் அப்பகுதி மக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படக்கூடிய அபாயம் உள்ளது. எப்போதும் குடிநீர் மற்றும் கழிவுநீர் வெளியேறுவதால் சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்வோர் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்பொதுமக்கள், பத்தலப்பள்ளி, ஓசூர்.
Related Tags :
Next Story