கியாஸ் லாரி மோதி மெக்கானிக் சாவு


கியாஸ் லாரி மோதி மெக்கானிக் சாவு
x
தினத்தந்தி 3 Dec 2021 1:52 AM IST (Updated: 3 Dec 2021 1:52 AM IST)
t-max-icont-min-icon

கியாஸ் லாரி மோதி மெக்கானிக் சாவு

ராயக்கோட்டை, டிச.3-
நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற போது கியாஸ் லாரி மோதி மெக்கானிக்பரிதாபமாக இறந்தார்.
கெலமங்கலம் அருகே நடந்த இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-
மெக்கானிக்
தேன்கனிக்கோட்டை அருகே அந்தேவனப்பள்ளியை சேர்ந்த சுல்தான் மகன் சாஜித் (வயது 24), மோட்டார் சைக்கிள் மெக்கானிக். இவரும், அவருடைய நண்பர் தேவராஜ் என்பவரும் மோட்டார் சைக்கிள் உதிரி பாகங்கள் வாங்கி வர ஓசூருக்கு சென்றனர். அங்கிருந்து மீண்டும் அந்தேவனப்பள்ளி நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.
தேன்கனிக்கோட்டை சாலை மாசிநாய்க்கனப்பள்ளிக்கும், பீ.செட்டிப்பள்ளிக்கும் இடையே வந்த போது முன்னால் சென்று கொண்டிருந்த கியாஸ் லாரியின் டிரைவர் திடீரென பிரேக் போட்டார். அப்போது சாஜித் ஓட்டி வந்த மோட்டார் சைக்களி் கண் இமைக்கும் நேரத்தில் லாரியின் பின்பகுதியில் மோதியது.
பரிதாப சாவு
இதில் தூக்கி வீசப்பட்ட சாஜித் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். அவருடைய நண்பர் தேவராஜ் படுகாயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
பலியான சாஜித் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து கெலமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக்கேயன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

Next Story