பாதை வசதி கேட்டு கிராம மக்கள்முற்றுகை


பாதை வசதி கேட்டு கிராம மக்கள்முற்றுகை
x
தினத்தந்தி 3 Dec 2021 1:54 AM IST (Updated: 3 Dec 2021 1:54 AM IST)
t-max-icont-min-icon

பாதை வசதி கேட்டு கிராம மக்கள்முற்றுகை

தர்மபுரி, டிச.3-
சிவாடி அருகே விவசாய நிலங்களுக்கு சென்றுவர பாதை வசதி கோரி கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.
முற்றுகை போராட்டம்
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி தாலுகா சிவாடி ஊராட்சி மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதியில் பெட்ரோலிய எரிபொருள் சுத்திகரிப்பு மையம் அமைக்க 140 ஏக்கருக்கு மேல் நிலம் கையகப்படுத்தபட்டது. இதனால் அந்த பகுதி மக்கள் தங்களது விவசாய நிலங்களுக்கு சென்று வர முடியாமல் சிரமப்பட்டு வந்ததாக தெரிகிறது.
எனவே விவசாய நிலங்களுக்கு சென்று வர பாதை வசதி கேட்டு கிராம மக்கள், நேற்று பெட்ரோலிய சுத்திகரிப்பு நிறுவனத்துக்கு ரெயில் பாதை அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து தண்டவாள பகுதியில் திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
தகவல் அறிந்த தர்மபுரி துணை போலீஸ் சூப்பிரண்டு வினோத் மற்றும் போலீசார் அங்கு சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அங்கு வந்த தர்மபுரி எம்.எல்.ஏ. எஸ்.பி.வெங்கடேஸ்வரன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் சண்முகம் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் அங்கு சென்று கிராம மக்களின் கோரிக்கை தொடர்பாக பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலைய அதிகாரிகள், மற்றும் ரெயில்வே அதிகாரிகளிடம் எடுத்துக் கூறினார்கள்.
இதுகுறித்து தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய தீர்வு காணப்படும் என அப்போது எஸ்.பி.வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ. தெரிவித்தார். இதையடுத்து போராட்டத்தை கைவிட்ட பொதுமக்கள் அந்தப் பகுதியில் இருந்து கலைந்து சென்றனர்.

Next Story