சேலம் அரசு ஆஸ்பத்திரியில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் ஊதிய மாற்றத்தை அமல்படுத்த கோரிக்கை


சேலம் அரசு ஆஸ்பத்திரியில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் ஊதிய மாற்றத்தை அமல்படுத்த கோரிக்கை
x
தினத்தந்தி 3 Dec 2021 2:16 AM IST (Updated: 3 Dec 2021 2:16 AM IST)
t-max-icont-min-icon

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்தினார்கள்.

சேலம்
தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கு ஊதிய மாற்றத்தை அமல்படுத்திட வலியுறுத்தி நேற்று தாங்கள் பணிபுரியும் இடங்களில் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி, தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நலச்சங்கம் சார்பில் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள எய்ட்ஸ் கட்டுப்பாட்டு பிரிவு அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி நேற்று கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு வந்திருந்தனர். பின்னர் அவர்கள் கோரிக்கை அட்டை மற்றும் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட தலைவர் ஜெகஜோதி தலைமை தாங்கினார். தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும், ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடு மற்றும் வருங்கால வைப்பு நிதி திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இதே போல ஆத்தூர், மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிகளில் உள்ள எய்ட்ஸ் கட்டுப்பாட்டு பிரிவு ஊழியர்களும் கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கை நிறைவேற்றாவிட்டால் அடுத்தக்கட்டமாக வருகிற 12-ந் தேதி சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்கள் தெரிவித்தனர்.

Next Story