தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 3 Dec 2021 2:36 AM IST (Updated: 3 Dec 2021 2:36 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி

வடிகால் வசதி வேண்டும்
நாகர்கோவில் மாநகராட்சியில் 2-வது வார்டு மூன்லைட் ஜங்சனில், பள்ளிவிளை கல்லறை எதிரில் உள்ள தெருவில் போதிய வடிகால் வசதி இல்லை. இதனால், மழைக்காலங்களில் தெருவில் வெள்ளம் தேங்கி நிற்கிறது. அத்துடன் அந்த பகுதியில் சுகாதார  சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, தெருவில் வடிகால் வசதி அமைத்து தண்ணீர் தேங்குவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? 
                                                                                           -எஸ்.கிங்சிலி, மூன்லைட் ஜங்சன்.  

சாலை சீரமைக்கப்படுமா?
முப்பந்தல் அருகில் உள்ள மூவேந்தர் நகரை அடுத்த அஜந்தா கார்டன் பகுதியில் கனமழையால் சாலை மிகவும் சேதமடைந்து உருகுலைந்து காணப்படுகிறது. இதனால் அவசர தேவைகளுக்கு கூட வாகனங்களில் செல்ல முடியவில்லை. எனவே இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                                                                                     -சந்திரசேகர், மூவேந்தர்நகர்.

சுகாதார சீர்கேடு
கருங்கல் சுண்டவிளை அரசு மருத்துவமனைக்கு செல்லும் சாலையில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் சாலையில் பாய்ந்து செல்கிறது. இதனால், அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்கிறவர்களும், நடந்து செல்கிறவர்களும் மிகுந்த இன்னலுக்கு உள்ளாகிறார்கள். மேலும், அந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடப்பதுடன், சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. எனவே, சாலையில் கழிவுநீர் பாய்வதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
                                                                                                                      -இ.ஜெபின், கருங்கல். 

சாலையை சீரமைக்க வேண்டும்
உண்ணாமலைக்கடை பேரூராட்சியில், கொடுங்குளத்தில் வலியகுளத்தின் கரையையொட்டி ஆயிரங்தெங்கு பகுதிக்கு ஒரு சாலை செல்கிறது. இந்த சாலை வழியாக தினமும் ஏராளமான பொதுமக்கள் வாகனங்களிலும், நடந்தும் செல்கிறார்கள். இங்கு சீரமைப்பு பணிக்காக சாலையில் பெரிய பெரிய ஜல்லிகள் நிரப்பப்பட்டது. அதன்பின்பு பணியை தொடர்ந்து  மேற்ெகாள்ளாமல் அப்படியே பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், அந்த வழியாக வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே, சாலையை விரைவில் சீரமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                                                                                              -ஏ.ராஜன், கொடுங்குளம். 

ஓடையை தூர்வார வேண்டும்
புத்தளம் பேரூராட்சிக்கு உட்பட்ட கணியான்விளை பகுதியில் உள்ள வடிகால் ஓடை மண்ணால் நிரம்பி அடையாளமே தெரியாமல் காணப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் வெள்ளம் வெளியேற முடியாமல் வீடுகளை சூழ்ந்து நிற்கிறது. அத்துடன் அந்த பகுதியில் கொசு உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே, மூடிகிடக்கும் வடிகால் ஓடையை தூர்வாரி மழைநீர் வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                                                                                                          -சுபாஷ், புத்தளம்.

சாலையில் ஆபத்து
நாகர்கோவில் நகரில் வடசேரி பகுதியில் சாலை மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. இங்குள்ள ஒரு தனியார் வங்கியின் அருகே ஆட்டோ ஸ்டாண்ட் எதிரில் சாலையில் பாதாள சாக்கடையை மூடியுள்ள சிமெண்ட் சிலாப்பு உடைந்து கம்பிகள் வெளியே தெரிந்த நிலையில் மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் சேதமடைந்து காணப்படும் சாலையையும், உடைந்த சிமெண்ட் சிலாப்பையும் சரி செய்ய வேண்டும். 
                                                                                                    -தமிழரசு, ஆரல்வாய்மொழி.

உயர்மட்ட பாலம் அமைக்கப்படுமா?
கீரிப்பாறை அருகே காளிகேசம் செல்லும் வழியில் ஒத்தக்கடை தரைப்பாலம் உள்ளது. இந்த பாலம் வழியாக தினமும் ஏராளமான ரப்பர் தோட்ட தொழிலாளர்கள், பக்தர்கள் பயணம் செய்கிறார்கள். மழை காலங்களில் காட்டாற்று வெள்ளத்தால் இந்த பாலம் அடிக்கடி சேதமடைந்து அடித்து செல்லப்பட்டு வருகிறது. எனவே, இங்கு நிரந்தர தீர்வாக உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும்.
                                                                                       -அனந்த கிருஷ்ணன், கேசவன்புதூர்.




Next Story