தேர்வில் குறைந்த மதிப்பெண்... பிளஸ்-2 மாணவன் தீக்குளித்து தற்கொலை


தேர்வில் குறைந்த மதிப்பெண்... பிளஸ்-2 மாணவன் தீக்குளித்து தற்கொலை
x
தினத்தந்தி 3 Dec 2021 3:18 PM IST (Updated: 3 Dec 2021 3:18 PM IST)
t-max-icont-min-icon

மதுரவாயல் அருகே தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் தந்தைக்கு பயந்து பிளஸ்-2 மாணவன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

பூந்தமல்லி,

சென்னை மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கத்தைச் சேர்ந்தவர் முனுசாமி. தனியார் பள்ளியில் பஸ் டிரைவராக உள்ளார். இவருடைய மகன் ராஜன் (வயது 18). இவர், அதே பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

ராஜன், தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததாக தெரிகிறது. இதனால் தந்தை திட்டுவார் என்ற பயத்தில் வீட்டுக்கு வந்த ராஜன், நேற்று மாலை தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இதில் படுகாயம் அடைந்த ராஜன், கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து மதுரவாயல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
1 More update

Next Story