பயணிகள் கோரிக்கையை ஏற்று சென்னை விமான நிலையத்தில் ‘ரேபிட் பி.சி.ஆர்.’ பரிசோதனைக்கு அனுமதி


பயணிகள் கோரிக்கையை ஏற்று சென்னை விமான நிலையத்தில் ‘ரேபிட் பி.சி.ஆர்.’ பரிசோதனைக்கு அனுமதி
x
தினத்தந்தி 3 Dec 2021 3:33 PM IST (Updated: 3 Dec 2021 3:33 PM IST)
t-max-icont-min-icon

பயணிகள் கோரிக்கையை ஏற்று சென்னை விமான நிலையத்தில் ‘ரேபிட் பி.சி.ஆர்.’ பரிசோதனை செய்ய விமான நிலைய ஆணையகம் அனுமதி வழங்கி உத்தரவிட்டு உள்ளது.

ஆலந்தூர்,

ஒமைக்ரான் வைரஸ் பரவல் காரணமாக மத்திய அரசின் புதிய கட்டுப்பாடு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளின்படி தென் ஆப்பிரிக்கா, பிரேசில், இங்கிலாந்து, வங்களாதேசம், மொரீஷியஸ், போஸ்ட்வானா, நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர், ஹாங்காங், சீனா, இஸ்ரேல் ஆகிய 12 நாடுகளில் இருந்து சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வரும் பயணிகளுக்காக ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்ய விமான நிலைய ஆணையகம் தனியாக இடவசதி செய்து உள்ளது. 450 பேர் அமரும் வகையில் இருக்கைகள் போடப்பட்டு உணவு வசதியும் செய்யப்பட்டு உள்ளன.

ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட்டு, அதன் முடிவு வரும்வரை 6 மணி நேரம் பயணிகள் விமான நிலையத்தில் காத்திருக்க வேண்டும். இதனால் உணவு கட்டணங்கள் அதிகமாக உள்ளது. 2 இட்லி ரூ.150 ஆக உள்ளது. எனவே உணவு கட்டணத்தை குறைக்க வேண்டும். 45 நிமிடங்களில் முடிவு வர கூடிய ‘ரேபிட் பி.சி.ஆர்.’ பரிசோதனை செய்ய அனுமதிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

பயணிகளின் கோரிக்கையை ஏற்று 12 நாடுகளில் இருந்து வரும் பயணிகள் ரூ.3,400 கட்டணத்தில் ‘ரேபிட் பி.சி.ஆர்.’ பரிசோதனை செய்ய விமான நிலைய ஆணையகம் அனுமதி வழங்கி உத்தரவிட்டு உள்ளது.

Next Story