அரசு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


அரசு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 3 Dec 2021 6:32 PM IST (Updated: 3 Dec 2021 6:32 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் அரசு பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று காலை தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. டாஸ்மாக்கின் மதுபான உற்பத்தி, கொள்முதல், விற்பனை, வருவாய், வரி, செலவினம் உள்ளிட்டவற்றை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும், டாஸ்மாக் நிறுவனத்தின் அனைத்து சங்கங்களையும் அழைத்து பேசி கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும், வெள்ளை அறிக்கை வெளியிட கோரிய மாநில பொருளாளர் சரவணனை தற்காலிக பணிநீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு கிராம ஊராட்சி களப்பணியாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார்.
இதில் டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில பொருளாளர் ஜெய்கணேஷ், மாநில செயலாளர் இளங்கோவன், மாவட்ட தலைவர் அன்பழகன், கிராம ஊராட்சி களப்பணியாளர் சங்க மாநில துணைத்தலைவர்கள் வீரப்பன், சங்கர், நியாய விலைக்கடை பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் சம்பத், பொருளாளர் ரஷீத் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் பாஸ்கரன் நன்றி கூறினார்.

Next Story