தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து தலைக்குப்புற செங்குத்தாக நின்றது
தேசூர் அருகே தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து அங்கிருந்த ஒரு புளியமரக்கிளையில் சிக்கி தலைக்குப்புற செங்குத்தாக நின்றது. விபத்தில் 9 மாணவமாணவிகள் படுகாயம் அடைந்தனர்.
சேத்துப்பட்டு
தேசூர் அருகே தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து அங்கிருந்த ஒரு புளியமரக்கிளையில் சிக்கி தலைக்குப்புற செங்குத்தாக நின்றது. விபத்தில் 9 மாணவ-மாணவிகள் படுகாயம் அடைந்தனர்.
மாணவ-மாணவிகள் கூச்சலிட்டு அலறினர்
சேத்துப்பட்டை அடுத்த வயலூர் கிராமம் அருகில் ஒரு தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி உள்ளது.
அதில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இன்று காலை மாணவ-மாணவிகளை அழைத்து வருவதற்காக பள்ளி வேன் ஒன்று வெளியில் சென்றனர்.
அந்த வேன் சீயமங்கலம், திருமால்பாடி ஆகிய கிராமங்களில் மாணவ-மாணவிகளை ஏற்றிக்கொண்டு தேசூர் வழியாக குன்னகம்பூண்டியை நோக்கி ெசன்றது. பெலாகம்பூண்டி நகருக்கு அருகில் சென்றபோது, அந்த வழியாக பின்னால் ஒரு மினிவேன் வருவதைப் பார்த்து பள்ளி வேன் டிரைவர் ஒதுக்கி ஓட்டி உள்ளார்.
அப்போது திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்த பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி அங்கிருந்த ஒரு புளியமரக்கிளையில் சிக்கி தலைக்குப்புற செங்குத்தாக நின்று கொண்டிருந்தது.
இருக்கைகளில் அமர்ந்திருந்த மாணவ-மாணவிகள் அலறி கூச்சலிட்டப்படி திபு திபுெவன ஒருவர் மீது ஒருவராக விழுந்து குவிந்து உள்ளேே கிடந்தனர்.
பெற்றோர் கண்ணீர்
அதில் பெரியகொரக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த பாலசஞ்சீவி (வயது 15), பாலமுருகன் (14), மோதிலால் (14), லோகேஷ் (10), லோகபிரியா (9) மற்றும் தென்தின்னலூர் கிராமத்தைச் சேர்ந்த ஞானாம்பிகை (17), நவீன் (10) மற்றும் கீழ்நமிண்டியைச் சேர்ந்த தென்னரசு (14), மெய்யரசு (6) ஆகிய 9 ேபர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தெள்ளார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்ைச அளித்து, பின்னர் மேல் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. வேன் கவிழ்ந்து பள்ளி மாணவ-மாணவிகள் படுகாயம் அடைந்த தகவல் பரவியதும் ஏராளமான பெற்றோர் தெள்ளார் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு குவிந்தனர்.
அவர்கள் தங்களின் பிள்ளைகள் நலமாக இருக்கிறார்களா? காயம் அடைந்தனரா? எனப் பதற்றத்துடன் ஒவ்வொரு மாணவராக சென்று பார்த்தனர். படுகாயம் அடைந்த மாணவ-மாணவிகளை அவர்களின் பெற்றோர் அருகில் வந்து பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
போலீஸ் விசாரண
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தேசூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமளவல்லி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரித்தனர்.
விபத்துக்குள்ளான இடத்தில் வேனை விட்டு விட்டு டிரைவர் தப்பியோடி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story