மாணவர்களை போலீசார் அழைத்துச் சென்றதால் அரசு பஸ் மீண்டும் சிறை பிடிப்பு


மாணவர்களை போலீசார் அழைத்துச் சென்றதால் அரசு பஸ் மீண்டும் சிறை பிடிப்பு
x
தினத்தந்தி 3 Dec 2021 6:44 PM IST (Updated: 3 Dec 2021 6:44 PM IST)
t-max-icont-min-icon

படிக்கட்டில் தொங்கிய மாணவர்கள் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டதால் அரசு பஸ்ைச மாணவர்கள் மீண்டும் சிறைபிடித்தனர்.

ஆரணி

படிக்கட்டில் தொங்கிய மாணவர்கள் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டதால் அரசு பஸ்ைச மாணவர்கள் மீண்டும் சிறைபிடித்தனர்.

கலைக்கல்லூரி

ஆரணியில் இருந்து செய்யாறு அரசு கலைக்கல்லூரிக்கு சென்ற அரசு டவுன் பஸ்சில் படிக்கட்டில் தொங்கிக் கொண்டிருந்த மாணவர்களை டிரைவரும், கண்டக்டரும் உள்ளே அழைத்ததால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் கடந்த 3 தினங்களுக்கு முன்பு அந்த பஸ்சை சிறைபிடித்தனர்.

அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் அளித்த உறுதி அளித்ததோடு கூடுதல் பஸ்சை வரவழைத்து மாணவர்களை அதில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

போலீசார் அழைத்து சென்றனர்

இந்த நிலையில் ஆரணியை அடுத்த எஸ்.வி. நகரம் ஊராட்சியில் பஸ் நிறுத்தும் இடத்தில் மீண்டும் கல்லூரி மாணவர்கள் பஸ்சை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீசார் மாணவர்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். 

மேலும் இன்று பகல் 12.30 மணியளவில் ஆரணி பழைய பஸ் நிலையத்தில் இருந்து செய்யாறு அரசு கல்லூரிக்கு சென்ற அரசு பஸ்சின் படிக்கட்டில் அதிக அளவில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் 3 பேரை ஆரணி நகர போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். 

இதனை கண்டித்து இரும்பேடு அருகே நான்கு முனைசாலை சந்திப்பு பகுதியில் 2 அரசு பஸ்களை கல்லூரி மாணவர்கள் தடுத்து நிறுத்தி சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தகவலறிந்த அரசு போக்குவரத்து கழக ஆரணி பணிமனை தி.மு.க. தொழிற்சங்க நிர்வாகி காசிலிங்கம் ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் உள்ளிட்ட போலீசார் விரைந்து சென்று கல்லூரி மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

நகர காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற கல்லூரி மாணவர்களை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். 

உடனடியாக நகர காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்த போது அவர்களை அவர்களை ஏற்கனவே அனுப்பி விட்டதாக தெரிவித்தனர். அதன் பின்னர் சமாதானம் செய்து 2 பஸ்களிலும் கல்லூரி மாணவர்களை ஏற்றி அனுப்பி வைத்தனர்.

மகளிர் மட்டும்

இது குறித்து ஆரணி பணிமனை கிளை மேலாளர் வெங்கடேசனிடம் கேட்டபோது, ‘‘கல்லூரி மாணவிகள் பயணிக்கும் பஸ்சில் மட்டும் அதிகப்படியான கல்லூரி மாணவர்கள் பயணம் செய்கின்றனர் பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி செல்கின்றனர்.

எனவே கல்லூரி நேரத்தில் ‘மகளிருக்கு மட்டும்’ என ஸ்டிக்கர் ஒட்டி கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்கள் பயணம் செய்யும் வகையில் தனி பஸ்கள் இயக்கப்படும். அதேபோல் அடுத்தடுத்த 10 நிமிடங்களில் கூடுதல் பஸ்கள் இயக்கப்படும்’’ என்றார். 

Next Story