தூத்துக்குடியில் சாலை மறியலில் ஈடுபட்ட கட்டுமான தொழிலாளர்கள் 35 பேர் கைது
தூத்துக்குடியில் சாலை மறியலில் ஈடுபட்ட கட்டுமான தொழிலாளர்கள் 35 பேர் கைது
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் சாலை மறியலில் ஈடுபட்ட கட்டுமான தொழிலாளர்கள் 35 பேர் கைது செய்யப்பட்டனர்.
மறியல்
தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் அருகே சிதம்பரனார் மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் பேச்சிமுத்து தலைமை தாங்கினார். பொருளாளர் காசி முன்னிலை வகித்தார். தொடர்ந்து தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கைது
போராட்டத்தில் கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், ஜி.எஸ்.டி வரியை குறைக்க வேண்டும், கட்டுமான தொழிலாளர்களின் நலவாரிய சடடங்களை திருத்தக்கூடாது, கட்டுமான தொழிலாளர்களுக்கு மாத பென்சன் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும், நலவாரியத்தில் பதிவு செய்த தொழிலாளியின் குழந்தைகளுக்கு 1-ம் வகுப்பில் இருந்து கல்வி நிதி வழங்க வேண்டும், புதிய பதிவு விண்ணப்பம் புதுப்பித்தல், பணப்பயன்கள் கேட்பு மனு மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
இதைத் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட 35 பேரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story