அரசு அலுவலர்களுக்கு குடியிருப்பு கட்ட இடம் ஒதுக்கீடு
அரசு அலுவலர்களுக்கு குடியிருப்பு கட்ட இடம் ஒதுக்கீடு
கோத்தகிரி
கோத்தகிரியில் இருந்து குன்னூர் செல்லும் சாலையில் வெஸ்ட் புரூக் பகுதியில் புதிதாக பெட்ரோல் பங்க் அமைப்பதற்கு பெறப்பட்ட விண்ணப்பத்தை தொடர்ந்து அந்த நிலம் பாதுகாப்பான பகுதியில் உள்ளதா? என்று நீலகிரி மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி நேற்று ஆய்வு செய்தார்.
இதனைத்தொடர்ந்து கோத்தகிரி கடை வீதி பகுதியில் நில அளவைத்துறை அலுவலர்களுக்கு குடியிருப்பு கட்டுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள வருவாய்த்துறைக்கு சொந்தமான இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மிளிதேன் கிராமத்தில் நடைபெற்ற பட்டா மாற்ற சிறப்பு முகாமை பார்வையிட்டார். இந்த ஆய்வின் போது வருவாய் ஆய்வாளர் தீபக், கிராம நிர்வாக அலுவலர்கள் மோகன் குமார், சபீர்கான், ஜெயசுதா ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story