காங்கிரஸ் கட்சியினர் ஊர்வலம்


காங்கிரஸ் கட்சியினர் ஊர்வலம்
x
தினத்தந்தி 3 Dec 2021 9:20 PM IST (Updated: 3 Dec 2021 9:20 PM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் திண்டுக்கல்லில் ஊர்வலமாக சென்றனர்.

திண்டுக்கல்: 

திண்டுக்கல் மாநகர மகிளா காங்கிரஸ் சார்பில் மத்திய அரசை கண்டித்து ஊர்வலம் நடைபெற்றது. இதையொட்டி மாநகர காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இருந்து காங்கிரஸ் கட்சியினர் ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர். அந்த ஊர்வலம் காமராஜர் சிலை முன்பு நிறைவுபெற்றது. இதையடுத்து அங்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு மாநகர மகிளா காங்கிரஸ் தலைவி ரோஜாபேகம் தலைமை தாங்கினார். இதில் மாநகர காங்கிரஸ் தலைவர் மணிகண்டன், வழிகாட்டு குழு தலைவர் முகமதுசித்திக், பொதுச்செயலாளர் அபிபுல்லா, வட்டார தலைவர்கள் மதுரைவீரன், பாலா உள்பட பலர் கலந்து கொண்டு பெட்ரோல், டீசல் விலை உயர்வு, 12 எம்.பி.க்கள் சஸ்பெண்டு ஆகியவற்றுக்காக மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டனர்.


Next Story