திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற ஆட்டோ டிரைவரால் திடீர் பரபரப்பு


திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற ஆட்டோ டிரைவரால் திடீர் பரபரப்பு
x
தினத்தந்தி 3 Dec 2021 9:27 PM IST (Updated: 3 Dec 2021 9:27 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற ஆட்டோ டிரைவரால் திடீர் பரபரப்பு

திருப்பூர், 
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற ஆட்டோ டிரைவரால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
தீக்குளிக்க முயற்சி
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று காலை ஒருவர் தனது மனைவி மற்றும் 2 மகள்களுடன் வந்தார். பின்னர் அவர் திடீரென்று தான் கொண்டு வந்த டீசல் கேனை எடுத்து தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை தடுத்து டீசல் கேனை பிடுங்கினார்கள். 
இதையடுத்து போலீசார் அவரிடம் விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் திருப்பூர் அய்யம்பாளையம் எஸ்.ஆர். நகரை சேர்ந்த வரதராஜ் (வயது 38), அவரது மனைவி சத்யா மற்றும் 2 மகள்கள் என்றும் தெரியவந்தது. வரதராஜ் திருப்பூர் கோவில்வழி பஸ் நிறுத்தத்தில் ஆட்டோ வாடகைக்கு ஓட்டி வருகிறார். இந்தநிலையில்  மனைவி நகையை அடகுவைத்து  கடந்த 1 வருடத்துக்கு முன்பு உறவினர் ஒருவருக்கு ரூ.1 லட்சம் கடன் கொடுத்துள்ளார். இதற்கிடையில் கடந்த 6 மாதமாக வரதராஜிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. வயிற்றில் அறுவை சிகிச்சை செய்ய அவருக்கு பணம் தேவைப்பட்டது. இதற்காக தனது உறவினரிடம் கேட்டபோது அவர் பணம் கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் மருத்துவ செலவுக்கு பணம் கிடைக்காத விரக்தியில் தீக்குளிக்க வந்ததாக வரதராஜ் கூறினார்.
போலீசார் விசாரணை
இதைத்தொடர்ந்து வரதராஜின் குடும்பத்தினரை உடனடியாக திருப்பூர் வீரபாண்டி போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று அங்கு விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story