ஒமைக்ரான் வைரஸ் பரவல் எதிரொலி காரணமாக திருப்பூர் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் சிறப்பு வார்டு
ஒமைக்ரான் வைரஸ் பரவல் எதிரொலி காரணமாக திருப்பூர் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் சிறப்பு வார்டு
திருப்பூர்,
ஒமைக்ரான் வைரஸ் பரவல் எதிரொலி காரணமாக திருப்பூர் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. முன்னேற்பாடு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சிறப்பு வார்டு அமைப்பு
கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்காரணமாக தமிழகம் முழுவதும் கண்காணிப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஏற்கனவே கொரோனா சிறப்பு வார்டு உள்ளது. அந்த வார்டுக்கு மேல்தளத்தில் புதிதாக சிறப்பு தனிமைப்படுத்துதல், கண்காணிப்பு வார்டு நேற்று தயார் செய்யப்பட்டுள்ளது.
24 படுக்கைகளுடன் இந்த வார்டு அமைக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. அதுபோல் நவீன ஆய்வகம், ஆய்வக நுட்புனர்கள் தயார்நிலையில் உள்ளனர். திரவ ஆக்சிஜன் தயாரிப்பு இருப்பதால் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு இல்லை. உயிர்காக்கும் மருந்துகள் உள்ளிட்டவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
அச்சப்பட தேவையில்லை
இந்த வார்டில் அனுமதிக்கப்படுபவர்கள் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் இருப்பார்கள். இதற்கு தேவையான மருத்துவ குழுவினரும் தயாராக உள்ளனர். இதுகுறித்து அரசு மருத்துவக்கல்லூரி டீன் முருகேசன் கூறும்போது, அரசின் வழிகாட்டுதலின்படி சிறப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை ஒமைக்ரான் அறிகுறிகளுடன் யாரும் அனுமதிக்கப்படவில்லை. தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. யாரும் அச்சப்பட தேவையில்லை என்றார்.
அரசு ஆஸ்பத்திரி சூப்பிரண்டு கோபாலகிருஷ்ணன் கூறும்போது, சிறப்பு வார்டில் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது. நவீன மருத்துவ சோதனைகள் மேற்கொள்ளவும், உயிர்காக்கும் மருந்துகள் போதுமான அளவும் தயாராக இருப்பு உள்ளது என்றார்.
Related Tags :
Next Story