சங்கராபுரம் அருகே பா ஜ க வினர் கண்டன ஆர்ப்பாட்டம்


சங்கராபுரம் அருகே பா ஜ க வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 3 Dec 2021 9:32 PM IST (Updated: 3 Dec 2021 9:32 PM IST)
t-max-icont-min-icon

சங்கராபுரம் அருகே பா ஜ க வினர் கண்டன ஆர்ப்பாட்டம்

சங்கராபுரம்

சங்கராபுரம் ஒன்றிய பா.ஜ.க. சார்பில் பூட்டை கிராமத்தில் பெட்ரோல்-டீசல் விலையை குறைக்காத மாநில அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய தலைவர் செந்தில் தலைமை தாங்கினார். மாவட்ட விவசாய அணி செயலாளர் சந்திரமோகன், பிரசார அணி செயலாளர் சரவணன், ஒன்றிய பொதுச் செயலாளர் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேற்கு ஒன்றிய செயலாளர் பாஸ்கர் வரவேற்றார். வக்கீல் செல்வநாயகம், மாநில பட்டியல் அணி துணைத் தலைவர் சண்முகம் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். இதில் ஒன்றிய பொருளாளர் மகாராஜன், துணைத்தலைவர் சுரேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story