திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்இன்று 645 மையங்களில் நடக்கிறது


திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்இன்று  645 மையங்களில் நடக்கிறது
x
தினத்தந்தி 3 Dec 2021 9:34 PM IST (Updated: 3 Dec 2021 9:34 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்இன்று 645 மையங்களில் நடக்கிறது

திருப்பூர், 
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்இன்று  645 மையங்களில் நடக்கிறது.
தடுப்பூசி
திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பூர் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 19 லட்சத்து 95 ஆயிரத்து 300 பேர் உள்ளனர். இதுவரை 17 லட்சத்து 41 ஆயிரத்து 128 பேர் முதல் தவணையும், 8 லட்சத்து 91 ஆயிரத்து 292 பேர் 2-வது தவணையும் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர். மேலும் 2 லட்சத்து 54 ஆயிரத்து 172 பேருக்கு முதல் தவணையும், 4 லட்சத்து 85 ஆயிரத்து 81 பேருக்கு 2-ம் தவணையும் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டியுள்ளது. 13-வது கட்டமாக இன்று (சனிக்கிழமை) கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடக்கிறது. இதில் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2,580 பணியாளர்கள் 
மாவட்டத்தில் ஒருநபர் கூட விடுபடாமல் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 645 மையங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடைபெறும். 2,580 பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பணியில் ஈடுபடுகிறார்கள். பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி பயன்பெறலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Next Story