இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நாற்று நடும் போராட்டம்


இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நாற்று நடும் போராட்டம்
x
தினத்தந்தி 3 Dec 2021 9:44 PM IST (Updated: 3 Dec 2021 9:44 PM IST)
t-max-icont-min-icon

சாலையை சீரமைக்கக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நாற்று நடும் போராட்டம்


மூங்கில்துறைப்பட்டு

மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள அரும்பராம்பட்டு பகுதியிலிருந்து ஆற்கவாடி செல்லும் சாலை மழையால் சேதம் அடைந்து போக்குவரத்திற்கு பயன்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே சாலையை சீரமைக்கக் கோரி அப்பகுதியை சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுனை புகார் தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து சாலையை சீரமைக்கக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சி அரும்பராம்பட்டு கிளை சார்பில் நாற்று நடும் போராட்டம் நடைபெற்றது. இதற்கு கிளைச் செயலாளர் குபேந்திரன் தலைமை தாங்கினார். வட்டச் செயலாளர் சுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் கோவிந்தராஜ், தேவேந்திரன் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.


Next Story