உளுந்தூர்பேட்டை அருகே ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்
உளுந்தூர்பேட்டை அருகே ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம் அழகான பெண் குழந்தை பிறந்தது
உளுந்தூர்பேட்டை
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பல்லவாடி கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி மனைவி ஆனந்தி(வயது 22). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று முன்தினம் பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து அவரை பிரசவத்துக்காக எலவனாசூர்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து ஆனந்தியை 108 ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று கொண்டிருந்தனர். ஆனால் அவருக்கு பிரசவ வலி அதிகமானதையடுத்து வழியிலேயே ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து மருத்துவ உதவியாளர் சரவணன் ஆனந்திக்கு பிரசவம் பார்த்தார். இதில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதன் பின்னர் தாய்-சேய் இருவரும் கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story