வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியல்


வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 3 Dec 2021 9:55 PM IST (Updated: 3 Dec 2021 9:55 PM IST)
t-max-icont-min-icon

வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியல்

திருப்பூர்,
திருப்பூர் மாநகராட்சி எஸ்.வி.காலனி 8-வது வீதியில் பாதாள சாக்கடை குழாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறி ரோட்டில் பாய்கிறது. அதிக அளவு கழிவுநீர் வெளியேறி அந்த பகுதியில் உள்ள 2 வீடுகளுக்குள் புகுந்தது. வீதியில் குளம் போல் தேங்கி கிடப்பதால் கடும் துர்நாற்றம் வீசி அந்த பகுதி வழியாக இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடந்து செல்ல முடியாத அளவுக்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
இந்தநிலையில் அப்பகுதியை சேர்ந்த பா.ஜ.க.நிர்வாகி தமிழ்மணி மற்றும் அப்பகுதியினர் நேற்று மதியம் எஸ்.வி.காலனி 8-வது வீதியில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். பாதாள சாக்கடை குழாயில் இருந்து கழிவுநீர் வீதியில் பாய்வதை தடுக்க வலியுறுத்தி நடைபெற்றது. சம்பவம் பற்றி அறிந்ததும் திருப்பூர் வடக்கு போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். உடனடியாக மாநகராட்சி ஊழியர்கள் வந்து கழிவுநீர் அடைப்பை சரி செய்ய முயன்றனர். முடியவில்லை. பின்னர் குழி தோண்டசீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

Next Story