இலங்கை தமிழர்கள் தமிழக அரசின் கொரோனா நிவாரண உதவித்தொகை பெறலாம்
தமிழக அரசின் கொரோனா நிவாரண உதவித்தொகை பெறலாம்
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பத்தூர் மாவட்டத்தில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமுக்கு வெளியே வசிக்கும் இலங்கை தமிழர் குடும்பங்களுக்கு தமிழக அரசின் கொரோனா நிவாரண உதவிதொகை ரூ.4 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.
எனவே 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் 9-ந்தேதிக்கு முன்னதாக இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு வந்து போலீஸ் நிலையங்களில் பதிவு செய்து வசித்து வரும் இலங்கை தமிழர் குடும்பங்களை சேர்ந்த நபர்கள் தங்களிடம் உள்ள காவல் ஆய்வாளரால் வழங்கப்பட்ட வெளிபதிவு சான்றிதழின் நகல் அல்லது தற்போது புதுப்பிக்கப்பட்ட வெளிபதிவு சான்றிதழின் நகல், அனைத்து மாவட்ட காவல் நிலையத்தில் பெறப்பட்ட வெளிப்பதிவில் வசிக்கும் இலங்கை தமிழர் பெயர்பட்டியல் மற்றும் தங்களின் விவர ஆவணங்களை தாமாகவே முன்வந்து ஆம்பூர் தாலுகா அலுவலகத்தில் இயங்கி வரும் சமூக பாதுகாப்பு திட்ட தனித் தாசில்தாரிடம் விண்ணப்பித்து தமிழக அரசின் கொரோனா நிவாரண உதவிதொகை ரூ.4 ஆயிரம் பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story